இன்று முதல் வேட்புமனு தாக்கல்: ஆனால், நாளை, நாளை மறுநாள் தாக்கல் செய்ய முடியாது!

தமிழகத்தில் நடைபெறும் தேர்தலுக்காக இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

இன்று முதல் மார்ச் 19ம் தேதி தேர்தல் தாக்கல் செய்யலாம் என்றும் நாளை சனி மற்றும் நாளை மறுநாள் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது என்றும் அறிவித்துள்ளது

இன்று காலை 11 மணிக்கு வேட்புமனுத்தாக்கல் தொடங்குகிறது என்றும் சென்னையில் உள்ள 16 சட்டசபை தொகுதிகள் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மார்ச் 19ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி என்றும் மார்ச் 22ஆம் தேதிக்குள் வேட்பு மனுவை வாபஸ் பெற வேண்டும் என்றும் மார்ச் 22ஆம் தேதி மாலை வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

Leave a Reply