இன்று முதல் புதிய 2 ஆயிரம் ‘மினி கிளினிக்’: துவக்கி வைக்கும் முதல்வர்!

தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் ‘மினி கிளினிக்’ புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

இன்று காலை சென்னை ராயபுரம், வியாசர்பாடி மற்றும் மயிலாப்பூர் ஆகிய பகுதிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று மினி கிளினிக்குகளை தொடங்கி வைக்கிறார் என தகவல்

இந்த மினி கிளினிக்குகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயல்படும்

கிராமப்புறங்களில் மட்டும் மாலை 7 மணி வரை திறந்திருக்கும். இந்த மினி கிளினிக்கில் ஒரு டாக்டர், ஒரு நர்சு, ஒரு மருத்துவ பணியாளர்கள் இருப்பார்கள். சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 200 மினி கிளினிக்குகள் அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply