இன்று முதல் தியேட்டரில் எத்தனை காட்சிகள்?

தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்பதால் இரவுக்காட்சி ரத்து செய்யப்படுவதாகவும், மாலை காட்சியின் நேரம் மாற்றப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

இரவு 9 மணிக்கு மேல் திரையரங்குகளில் காட்சிகள் ஒளிபரப்பக் கூடாது என்பதால் மாலை காட்சி 5 மணி முதல் 7 மணிக்குள் தொடங்கும் என்றும் அதிகபட்சமாக 8 அல்லது 8.30 மணிக்குள் காட்சிகள் முடிவடையும் வகையில் மாலை காட்சிகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் அதே நேரத்தில் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் புதிய திரைப்படங்களை வெளியிட தயக்கம் காட்டி வருவதால் பழைய படங்கள் மட்டுமே திரையிடப்படவுள்ளன என்பது குறிப்ப்பிடத்தக்கது.

Night show cancel in TN theaters

Leave a Reply