shadow

இன்று முதல் டி-20 போட்டி: இந்தியாவின் வெற்றி தொடருமா?

இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட், ஒருநாள் இரண்டு தொடர்களையும் வென்றுவிட்ட இந்திய அணி, இன்று இரு அணிகளும் முதல் டி-20 போட்டியில் மோதவுள்ளது

கட்டாக்கில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்றே கருதப்படுகிறது. டி.-20 போட்டியை பொருத்தவரையில் இலங்கை அணி, இந்திய அணிக்கு சவாலாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது

இந்திய அணியில் ரோஹித் சர்மா, எஸ்.எஸ்.ஐயர், தோனி, பாண்டியா, ராகுல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் முன்னணி பேட்ஸ்மேன்களாக உள்ளனர். அதேபோல் பும்ரா, குல்தீப், சாஹல், ஆகிய பந்துவீச்சாளர்களும் ஃபார்மில் உள்ளதால் இந்திய அணியின் வெற்றி தொடரும் என்றே கருதப்படுகிறது

Leave a Reply