இன்று முதல் அடுத்த கட்ட பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி தமிழகத்தின் பல பகுதிகளில் பிரச்சாரம் செய்தார் என்பது தெரிந்ததே

இடையில் அவர் தனது காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில் சில நாட்கள் ஓய்வு எடுத்தார். இந்த நிலையில் தற்போது இன்று முதல் மீண்டும் அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்

இன்று அவர் ஆலந்தூர் தொகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆலந்தூரில் தான் கமலஹாசன் போட்டியிடப் போவதாகவும் செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் முதல் முறையாக தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கும் கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published.