இன்று புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்

உலகம் முழுவதும் இன்று புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறவிருக்கும் நிலையில் சென்னையில் புத்தாண்டையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி சென்னையின் ஒருசில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது

இன்று இரவு 8 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை சென்னை மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

அடையாறில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் இரவு 8 மணிக்கு பிறகு சாந்தோம் கச்சேரி சாலை வழியாக சென்று ராயப்பேட்டை வழியாக அண்ணா சாலைக்கு செல்ல வேண்டும்

பாரிமுனை பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் போர் நினைவுச் சின்னம், கொடிமரச் சாலை வழியாக அண்ணா சாலைக்கு செல்ல வேண்டும்

இவ்வாறு காவல்துறை அறிவித்துள்ளது

Leave a Reply