இன்று திட்டமிட்டபடி பிளஸ் டூ தேர்வு நடைபெறும்: தமிழக அரசு அறிவிப்பு

இன்று திட்டமிட்டபடி பிளஸ் டூ தேர்வு நடைபெறும்: தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கேட்டுக் கொண்டாலும் தமிழக அரசு பிளஸ் 2 தேர்வை நடத்தி முடிக்க முடிவு செய்துள்ளது

அதன்படி அட்டவணைப்படி இன்று பிளஸ்டூ தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் 10 மணிக்கு பதிலாக 10.30 மணிக்கு பிளஸ்டூ தேர்வு தொடங்கும் என்றும் 1.45 மணிக்கு தேர்வு முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் பிளஸ் டூ தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்கு ஏற்ப பேருந்துகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே இன்று பிளஸ்டூ தேர்வு எழுதும் மாணவர்கள் சிரமமின்றி அவரவர் தேர்வு மையத்திற்கு செல்ல எளிதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

பிளஸ்டூ தேர்வு, மாணவர்கள், பேருந்துகள், தமிழக அரசு,

Leave a Reply

Your email address will not be published.