shadow

தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி, தேனி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நாளை நாளை ஜூலை 6ஆம் தேதி மற்றும் நாளை மறுதினம் ஜூலை 7ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும்

சென்னையை பொருத்தவரை கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஒரிரு இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.