இன்று செய்தியாளர்களை சந்திக்கின்றார் கமல்ஹாசன்: முக்கிய அறிவிப்பா?

அதிமுக கூட்டணியை அடுத்து மூன்றாவது கூட்டணியாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணி உருவாகி இருக்கிறது

இந்த கூட்டணியில் ஐஜேகே மற்றும் சரத்குமார் கட்சி இணைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்த அறிவிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது 2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 10ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஜிஆர்டி கிராண்ட் ஹோட்டல் சென்டரில் கமலஹாசன் அவர்களால் வெளியிடப்படும் அனைத்து பத்திரிகையாளர்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது

Leave a Reply