இன்று உலக யோகா தினம்:

பொதுமக்களிடையே பிரதமர் பேச்சு

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ஆம் தேதியை உலக யோகா தினமாக அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று அந்த தினம் அனுசரிக்கப்படுகிறது

உலக யோகா தினத்தை அடுத்த பிரதமர் மோடி அவர்கள் என்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார்: அவர் பேசியதாவது சர்வதேச அளவில் ஒற்றுமையை பறைசாற்றும் நாளாக இது அமைந்துள்ளது. யோகா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் ஏராளமானோர் யோகா கற்றுக் கொள்ள ஆர்வம் கொண்டுள்ளனர். கொரோனாவை வீழ்த்த யோகா சிறந்த வழிமுறையாக இருக்கிறது. உங்களது அன்றாட வாழ்வில் யோகாவை ஒரு அங்கமாக பழகுங்கள்’ என்று பிரதமர் மோடி பேசினார்.

மேலும் யோகா உடல் வலிமையுடன் மன வலிமையையும் மேம்படுத்துகிறது என்றும், யோகாவிற்கு மதம், மொழி, நாடு என்ற எந்த பேதமும் இல்லை என்றும், யோகாவின் பயன்களை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த நாடு தற்போது உணர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published.