இன்று உலக பாயாச தினம்: விதவிதமான பாயாசங்கள் செய்து அசத்தல்

பாயாசம் என்றாலே பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இந்த நிலையில் இன்று உலகம் முழுவதும் உலக பாயாச தினம் கொண்டாடப்பட்டது

உலக பாயாச தினத்தையொட்டி கோவையில் நடைபெற்ற விழாவில் 36 வகை பாயாசங்களை பார்வையாளர்கள் சுவைத்து மகிழ்ந்தனர். மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழாவில், இளநீர், கேரட், சிறுதானியம், உருளைக்கிழங்கு ,ரவை உள்ளிட்ட 36 வகை பாயசம் காட்சிக்கு வைக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

பாரம்பரிய உணவுகளை மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக இந்த பாயச தினம் கொண்டாடப்படுவதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்

Leave a Reply