இன்றும் நாளையும் கனமழை கொட்டப்போகிறது: எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

இன்று 9 மாவட்டங்களிலும், நாளை 7 மாவட்டங்களிலும், கன மழை கொட்ட போகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு இன்று மழை பெய்யும் மாவட்டங்கள் பின்வருமாறு: நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை

நாளை மழை பெய்யுமா வட்டங்கள் பின்வருமாறு: நீலகிரி, கோவை, தேனி, அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல் மற்றும் டெல்டா மாவட்டங்கள்