இன்னும் இரண்டே போட்டி: சாம்பியன் ஆகுமா சென்னை அணி?

கடந்த சில மாதங்களாக ஐஎஸ்எல் கால்பந்து போட்டி நடைபெற்ற நிலையில் இந்த போட்டியின் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த சென்னை அணி, தற்போது ஆச்சரியமாக அரையிறுதி ஆட்டம் வரை வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வரும் 29ஆம் தேதி சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற இருக்கும் அரையிறுதி ஆட்டத்தில் சென்னை அணி கோவா அணிக்கு எதிராக விளையாடி உள்ளது. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி இந்த போட்டியில் வெல்லும் அணி 2021 இல் நடைபெற இருக்கும் என்எப்சி சாம்பியன் லீக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது

முதல் 6 ஆட்டங்களில் மூன்று ஆட்டங்களில் தோல்வி அடைந்து இரண்டு ஆட்டங்களில் டிரா செய்து ஒரே ஒரு வெற்றி மட்டுமே பெற்று வந்த சென்னை அணி, அதன் பிறகு அதிரடியாக ஒரு சில மாற்றங்கள் செய்த பின்னர் தற்போது 8 போட்டிகளில் வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது

29-ஆம் தேதி நடைபெறும் அரையிறுதி போட்டி மற்றும் இறுதி போட்டி என இன்னும் இரண்டு போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று விட்டால் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்று ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply