இனி பள்ளிகளில் ஆறு இடைவேளை: அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு

இனி பள்ளிகளில் ஆறு இடைவேளை: அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு

பள்ளிகளில் இனி ஒவ்வொரு பாடவேளை முடிந்த பிறகு மாணவர்கள் தண்ணீர் அருந்த 10 நிமிட இடைவேளை வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளதால் இதுவரை இரண்டு இடைவேளை மட்டுமே இருந்த நிலையில் இனி ஆறு இடைவேளை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மாணவர்களின் ஆரோக்கியத்தை கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply