இனிமேல் பிளஸ் 2 படித்தவுடன் திருமணம்: அரசின் அதிரடி முடிவால் ஜாலியாகும் பசங்க!

இனிமேல் பிளஸ் 2 படித்தவுடன் திருமணம்: அரசின் அதிரடி முடிவால் ஜாலியாகும் பசங்க!

இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஆண்களின் திருமண வயது 21 என்பதும் பெண்களின் திருமண வயது 18 என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் பிரதமர் தலைமையிலான அமைச்சரவை கூடி ஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் இனி பிளஸ் டூ படித்த அடுத்த ஆண்டே ஆண்களுக்கும் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் குழந்தைகள் திருமணத்தில் தடை செய்யவும் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. திருமண வயதை அடையாத இருவர் திருமணம் செய்து கொண்டால் மணமக்கள் விரும்பினால் திருமண வயது வந்தபின்னர் வாழலாம் என்ற சட்டம் மாற்றப்பட்டு, இனி திருமணம் வயது இல்லாதோர் திருமணம் செய்து கொண்டால் திருமணம் செல்லாது என்ற சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது
மேலும் குழந்தைகள் திருமணத்தை செய்து வைப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் 7 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் சட்டம் ஏற்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply