இனிமேல் இலவசம் கிடையாது: ஜியோவின் அதிர்ச்சி அறிவிப்பு

இனிமேல் இலவசம் கிடையாது: ஜியோவின் அதிர்ச்சி அறிவிப்பு

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ ஆர்மபத்தில் ஏர்டெல், ஏர்செல், வோடஃபோன், பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட நெட்வொர்க்கில் அவுட்கோயிங் கால்கள் கட்டணம் இலவசம் என்ற அறிவிப்போடு களமிறங்கியது. இதனால் ஜியோவுக்கு கோடிக்கணக்கில் வாடிக்கையாளர்கள் குவிந்தனர்.

இந்த நிலையில் தற்போது திடீரென இன்று முதல் அனைத்து ஜியோ வாடிக்கையாளரும் மற்ற நெட்வொர்க்கிற்கு அழைக்கும் போது நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த கட்டணம் லேண்ட்லைனில் அழைக்கவோ, ஜியோ சிம்முக்கு அழைக்கவோ கட்டணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

ஜியோவின் இந்த அறிவிப்பால் மற்ற நெட்வொர்க்கில் இருந்து ஜியோவுக்கு மாறியவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

Leave a Reply