இனிமேல் அஜித்துக்கு பேனர் வைக்க மாட்டோம்: சுபஸ்ரீ உயிரிழப்பை அடுத்து ரசிகர்கள் உறுதிமொழி

அஜித் திரைப்படங்கள் மற்றும் அஜித் பிறந்த நாள் உள்பட எந்த நிகழ்வுகளுக்கும் இனிமேல் பேனர் வைக்க மாட்டோம் என மதுரை அஜித் ரசிகர்கள் உறுதிமொழி அளித்துள்ளது பேனர் கலாச்சாரம் ஒழிவதற்கான ஆரம்பப்புள்ளியாக பார்க்கப்படுகிறது

பேனர்கள் வைக்க வேண்டாம் என ஒருசில அரசியல்வாதிகள் கூறியிருந்தாலும், அவர்களுடைய பேச்சு தண்ணீரில் எழுதப்பட்ட எழுத்துக்கள் போல் மறைந்துவிடும். சுபஸ்ரீ இன்று கூறும் அரசியல்வாதிகள் நாளையே மறந்துவிடுவார்கள்

இந்த நிலையில் இன்று அஜித் ரசிகர்கள், ‘சாலையில் பேனர் கவிழ்ந்து சுபஸ்ரீ என்ற சகோதரியின் உயிரிழப்புக்கு மிகுந்த வேதனை தெரிவித்த அஜித் ரசிகர்கள் ‘தவறுகள் நடப்பதற்கு முன் நாம் சிந்தித்து செயல்பட தவறுவதால் ஒரு இழப்பு நமக்கு அறிவுறுத்துகின்றது. இனிமேலாவது சிந்தித்து செயல்படுவோம். அந்த சகோதரியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திகின்றோம்’ என்று கூறியுள்ளனர்.

Leave a Reply