இனிமேலாவது சினிமா டிராக்டர்களை மாஸ் நடிகர்கள் ஒதுக்குவார்களோ?

ஒரு மாஸ் நடிகரின் திரைப்படம் வெளிவந்து விட்டால் உடனே சினிமா டிராக்காரர்கள் அந்த படத்தின் வசூல் குறித்த விபரங்களை புள்ளி விவரமாக தெரிவித்து வருகின்றனர்

ஒரு திரைப்படம் எவ்வளவு வசூல் ஆனாலும் அதை விட மூன்று மடங்கு அல்லது நான்கு மடங்கு வசூல் ஆனதாக பொய்யான செய்தியை வெளியிட்டு அந்த நடிகருக்கு புகழை பெற்றுத் தருவதாக ஒரு மாய பிம்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அந்த நடிகரிடம் இருந்து பணம் பெற்றுக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு பொய்யான தகவல்களால் தான் வருமான வரித்துறை அதிகாரிகள் தற்போது சோதனையில் ஈடுபட்ட காரணமாக இருக்கின்றது

இனிமேலாவது மாஸ் நடிகர்கள் தங்கள் நடிக்கும் படங்கள் வெளிவரும்போது அந்த படங்களின் பொய்யான வசூலை தகவலாக கொடுத்துக்கொண்டிருக்கும் சினிமா டிராக்காரர்களுக்கு ஆதரவு அளிக்கக்கூடாது என்றும் உண்மையான வசூல் நிலவரங்களை அந்தந்த பட தயாரிப்பு நிறுவனங்களே அவ்வப்போது வெளியிட்டு இதுபோன்ற பொய்யான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது

Leave a Reply