இந்த விஷயத்தில் நான் அய்யர் பக்கம்: டி.ஆர்.பாலுவின் மகன்

திமுக என்றாலே அய்யர் சமுதாயத்திற்கு எதிரான கட்சி என்று கூறப்பட்டு வரும் நிலையில் அக்காட்சியில் எம்பி டிஆர் பாலு அவர்களின் மகன் இந்த விஷயத்தில் நான் அய்யர் பக்கம் தான் என்று கூறியுள்ளார்

மதுரையில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் ‘கும்பகோணம் அய்யர் சிக்கன்’ என்ற ஒரு புதிய மனுவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு அய்யர் சமூகத்தினர்களிடம் இருந்து பெரும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் டிஆர் பாலுவின் மகன் டிஆர்பி ராஜா அவர்கள் தனது டுவிட்டரில் இது ஒரு மலிவான விளம்பரம் என்றும் சைவ உணவு சாப்பிடும் சமூகத்தினரை உரசிப்பார்க்கும் இவ்வகை விளம்பரம் தேவையில்லாத ஒன்று என்றும் இந்த விஷயத்தில் நான் அய்யரின் பக்கம் தான் இருப்பேன் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த டுவீட் பாராட்டுக்களை குவிந்து வருகிறது

Leave a Reply