shadow

weekly rasipalanமேஷம்
உழைப்பால் உயரும் உத்தமர்களே! 12ஆம் தேதி வரை ராசிநாதன் சுக்ரன் ராசியிலேயே ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பிரபலங்களின் ஆதரவுக் கிட்டும். வீடு மாற வேண்டுமென நினைப்பீர்கள். மனைவி சில நேரங்களில் முணுமுணுத்தாலும் கடைசி நேரத்தில் உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்வார். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் உறவினர்களால் ஆதாயம் உண்டு. பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் பொறுப்பாக இருப்பார்கள். பள்ளிப் பருவத் தோழிகளை சந்தித்து மகிழ்வீர்கள். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். சனி, ராகு, கேது மற்றும் குரு உங்களுக்கு சாதகமாக இல்லாததால் சில நேரங்களில் வெறுமையை உணருவீர்கள். தோல்விமனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். அடி வயிற்றில் வலி, செரிமானக் கோளாறு, தலைச்சுற்றல் வந்துப் போகும். அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்துக்கு கொண்டு செல்லுங்கள். கன்னிப் பெண்களே! பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்யோகத்தில் சில நேரங்களில் பிடிப்பில்லாமல் போகும். ஆனால் மூத்த அதிகாரி உங்கள் நேர்மையை பாராட்டுவார். வளைந்துக் கொடுத்து முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 8, 9, 12 அதிஷ்ட எண்கள்: 6, 8 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, மஞ்சள் அதிஷ்ட திசை: தென்மேற்கு

ரிஷபம்
உழைப்பால் உயரும் உத்தமர்களே! 12ஆம் தேதி வரை ராசிநாதன் சுக்ரன் ராசியிலேயே ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பிரபலங்களின் ஆதரவுக் கிட்டும். வீடு மாற வேண்டுமென நினைப்பீர்கள். மனைவி சில நேரங்களில் முணுமுணுத்தாலும் கடைசி நேரத்தில் உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்வார். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் உறவினர்களால் ஆதாயம் உண்டு. பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் பொறுப்பாக இருப்பார்கள். பள்ளிப் பருவத் தோழிகளை சந்தித்து மகிழ்வீர்கள். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். சனி, ராகு, கேது மற்றும் குரு உங்களுக்கு சாதகமாக இல்லாததால் சில நேரங்களில் வெறுமையை உணருவீர்கள். தோல்விமனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். அடி வயிற்றில் வலி, செரிமானக் கோளாறு, தலைச்சுற்றல் வந்துப் போகும். அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்துக்கு கொண்டு செல்லுங்கள். கன்னிப் பெண்களே! பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்யோகத்தில் சில நேரங்களில் பிடிப்பில்லாமல் போகும். ஆனால் மூத்த அதிகாரி உங்கள் நேர்மையை பாராட்டுவார். வளைந்துக் கொடுத்து முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 8, 9, 12 அதிஷ்ட எண்கள்: 6, 8 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, மஞ்சள் அதிஷ்ட திசை: தென்மேற்கு

மிதுனம்
பாசத்திற்கு கட்டுப்பட்டவர்களே! சனி வலுவாக 6&ம் வீட்டில் தொடர்வதால் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். வெற்றி பெற்ற மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். கம்பீரமாக பேசுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வேற்று மொழி, மதத்தவர்கள் உதவுவார்கள். அரைக்குறையாக நின்ற கட்டிட வேலைகளைத் தொடங்குவீர்கள். புது சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். மனைவியிடம் கலந்தாலோசித்து செலவுகளைக் குறைக்க முயற்சி செய்வீர்கள். தோழியிடம் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். வழக்கு சாதகமாகும். மச்சினருக்கு நல்ல மணப்பெண் அமையும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். சொந்த&பந்தங்கள் மதிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். 3&ம் இடத்தில் குரு மறைந்திருப்பதால் வேலைச்சுமை, வீண் அலைச்சல், காரியத் தாமதம், வீண் டென்ஷன், செலவுகள் வந்துப் போகும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். அரசியல்வாதிகளே! வீண் வறட்டு கௌரவத்திற்காக சேமிப்புகளை கரைத்துக் கொண்டிருக்காதீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தன்னம்பிக்கையால் வெற்றி பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 7, 9, 10 அதிஷ்ட எண்கள்: 1, 3 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன் அதிஷ்ட திசை: வடக்கு

கடகம்
மண் மனம் மாறாதவர்களே! குரு 2&ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிலும் வெற்றி கிட்டும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். பணபலம் உயரும். வீடு கட்டப் ப்ளான் அப்ரூவலாகி வரும். சிலர் புது வீடு கட்டிக் குடிப்புகுவீர்கள். பதவி, பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். குழந்தை பாக்யம் கிடைக்கும். நவீன ரக வாகனம், கைப்பேசி வாங்குவீர்கள். உறவினர், தோழிகள் மத்தியில் அந்தஸ்து உயரும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கு வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் வீண் வாக்குவாதம், திடீர் பயணங்கள், செலவுகள், பல் வலி, பார்வைக் கோளாறு வந்துப் போகும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். சனி 5&ல் தொடர்வதால் பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் குறித்த கவலைகள் வந்துப் போகும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்கமாவீர்கள். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் வேலையாட்களால் வியாபாரத்தின் தரம் உயரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் நினைப்பதை முடித்துக் காட்டுவீர்கள். தொட்ட காரியங்கள் துலங்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 10, 11, 12 அதிஷ்ட எண்கள்: 5, 8 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு அதிஷ்ட திசை: மேற்கு

சிம்மம்
ஒளிவு மறைவில்லாமல் பேசுபவர்களே! புதனும், சுக்ரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் சாமர்த்தியமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மனைவிக்கு புது ஆலோசனைகள் தருவீர்கள். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். வீடு கட்டும் பணியை தொடர கடன் கிடைக்கும். உறவினரின் அன்புத் தொல்லை குறையும். பழுதான குக்கர், மிக்சியை மாற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. 4&ல் சனியும், ராசிக்குள் குருவும், ராகுவும் தொடர்வதால் தாழ்வுமனப்பான்மை, மறைமுக எதிர்ப்பு, கை, கால் வலி, உடல் அசதி, வயிற்று உப்புசம், வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலி வந்துப் போகும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். மற்றவர்களை நம்பி எந்தப் பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். அரசியல்வாதிகளே! எதிர்கட்சிக்காரர்கள் உதவுவார்கள். கன்னிப் பெண்களே! கெட்ட பழக்கங்களிலிருந்தும், கெட்ட நண்பர்களின் சகவாசங்களிலிருந்தும் விடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் மேலதிகாரியின் அறிமுகம் கிடைக்கும். மூளை பலத்தால் முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 7, 8, 12 அதிஷ்ட எண்கள்: 4, 7 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க் அதிஷ்ட திசை: தெற்கு

கன்னி
பிறரை மகிழ்வித்து மகிழ்பவர்களே! சனியும், செவ்வாயும் வலுவாக 3&ம் வீட்டில் நிற்பதால் உங்களின் புகழ், கௌரவம் கூடும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வராது என்றிருந்த பணம் வரும். உங்கள் ரசனைக் கேற்ப வீடு வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். புது வேலைக் கிடைக்கும். அயல்நாட்டிலிருக்கும் தோழிகளால் ஆதாயமடைவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உறவினர்கள் தேடி வருவார்கள். ராசிக்கு 12&ல் குருவும், ராகுவும் தொடர்வதால் யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வேலைச்சுமை அதிகரிக்கும். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அரசியல்வாதிகளே! கட்சி மேல் மட்டத்திற்கு சில ஆலோசனை வழங்குவீர்கள். கன்னிப் பெண்களே! நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். காதல் விவகாரங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் விவகாரத்தில் மூக்கை நுழைக்காதீர்கள். வெற்றிக்கு வித்திடும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 9, 10, 12 அதிஷ்ட எண்கள்: 3, 5 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை அதிஷ்ட திசை: தென்மேற்கு

துலாம்
எளிமையாகப் பழகுபவர்களே! புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். சின்ன இடமாவது வாங்க வேண்டுமென நினைப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். மச்சினர், உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். பழைய சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு சாதகமாகும். கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக் கொள்வீர்கள். சமையலறையை நவீனமாக்குவீர்கள். பாதச் சனி தொடர்வதால் உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்தினாலும் மீண்டு வெளியே வருவீர்கள். காலில் சின்னச் சின்ன காயங்கள் ஏற்படக்கூடும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். அரசியல்வாதிகளே! தலைமையைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோரின் பேச்சுக்கு முக்கியத்துவமளியுங்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். பங்குதாரர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உத்யோகத்தில் பதவி உயர்வுடன் இடமாற்றம் உண்டு. அதிரடி முன்னேற்றங்களை சந்திக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 10, 11, 12 அதிஷ்ட எண்கள்: 2, 8 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை அதிஷ்ட திசை: வடமேற்கு

விருச்சிகம்
மனசாட்சியை முக்கிய சாட்சியாக நினைப்பவர்களே! 12ஆம் தேதி வரை உங்களுடைய ராசிக்கு 7&ல் சுக்ரன் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பிரபலங்கள் உதவுவார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்குக் கூடி வரும். 3ஆம் தேதி முதல் புதன் ராசிக்கு 7&ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்கயிருப்பதால் உறவினர், தோழிகளுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். பூர்வீக சொத்தை விரிவுப்படுத்துவீர்கள். 10&ல் குருவும், ராகுவும் தொடர்வதால் வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். சிறுசிறு அவமானங்கள் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாகி முடியும். முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். சூரியனின் போக்கு சரியில்லாததால் மனஉளைச்சல், வீண் டென்ஷன், அடிவயிற்றில் வலி, வேனல் கட்டி வந்துச் செல்லும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். அரசியல்வாதிகளே! பொதுக்கூட்டம், போராட்டங்களில் முன்னிலை வகிப்பீர்கள். கன்னிப் பெண்களே! உங்கள் தகுதிக்கேற்ப நல்ல வேலைக் கிடைக்கும். பள்ளிப் பருவ தோழிகளை சந்திப்பீர்கள். கடையை விரிவுப்படுத்தி கட்ட முடிவெடுப்பீர்கள். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் உங்களின் போராட்டங்கள் மற்றவர்களுக்கு புரியவில்லையே என வருந்துவீர்கள். தன் பலம் பலவீனத்தை உணரும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 7, 11, 12 அதிஷ்ட எண்கள்: 1, 9 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன் அதிஷ்ட திசை: வடக்கு

தனுசு
ஒற்றுமையே உயர்வு தரும் என்பதை உணர்ந்தவர்களே! ராசிநாதன் குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் புதிய பாதையில் பயணிக்க தொடங்குவீர்கள். மாறுபட்ட அணுகு முறையால் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பணம் வரும். பழைய வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். நாத்தனார், மச்சினர் மதிப்பார்கள். 12ஆம் தேதி வரை சுக்ரன் 6&ல் மறைந்திருப்பதால் மனைவிக்கு அலைச்சல், வீண் வாக்குவாதம் வந்துச் செல்லும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். புதனும் 6&ல் மறைந்திருப்பதால் உறவினர், தோழிகளுடன் பகை, நரம்புக் கோளாறு வந்துச் செல்லும். டி.வி., ஃப்ரிட்ஜ் பழுதாகும். ஏழரைச் சனி தொடர்வதால் யாருக்காகவும் சாட்சி கையப்பமிட வேண்டாம். இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாறாதீர்கள். அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் எதிர்கட்சிக்காரர்களை விமர்சித்து பேசாதீர்கள். கன்னிப் பெண்களே! புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். விட்டுக் கொடுத்து விட்டதைப் பிடிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 7, 9, 11 அதிஷ்ட எண்கள்: 2, 7 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள் அதிஷ்ட திசை: கிழக்கு

மகரம்
சமயோஜித புத்தியால் சாதிப்பவர்களே! லாப வீட்டில் செவ்வாயும், சனியும் தொடர்வதால் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பித் தருவார்கள். குழந்தை பாக்யம் கிட்டும். உறவினர், தோழிகள் வீட்டு திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசத்தை முன்னின்று நடத்துவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். 5&ல் சூரியன் தொடர்வதால் பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். கன்னிப் பெண்களே! பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். அரசியல்வாதிகளே! தொகுதி மக்களிடம் நெருங்கிப் பழங்குங்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சவால்களை சந்திக்க வேண்டி வரும். மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 7, 8, 9 அதிஷ்ட எண்கள்: 1, 5 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா அதிஷ்ட திசை: வடகிழக்கு

கும்பம்
தராதரம் அறிந்து` பழகும் சிறந்த நிர்வாகிகளே! புதனும், சுக்ரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். அயல்நாட்டிலிருக்கும் உறவினர்கள், தோழிகளால் நன்மை உண்டு. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். சர்ப்ப கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இல்லாததால் நெஞ்சு எரிச்சல், ஹார்மோன் பிரச்னை, உடம்பில் கால்சியம் சத்துக் குறைபாடுகளெல்லாம் வந்துச் செல்லும். சில விஷயங்களில் முன்யோசனையில்லாமல் சிக்கிக் கொள்ளாதீர்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம். கன்னிப்பெண்களே! தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். கசந்த காதல் இனிக்கும். அரசியல்வாதிகளே! சகாக்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்கள் தலை தூக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 8, 9, 11 அதிஷ்ட எண்கள்: 3, 6 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, நீலம் அதிஷ்ட திசை: மேற்கு

மீனம்
அதர்மங்களை கண்டு அஞ்சாதவர்களே! ராகு வலுவாக 6&ம் வீட்டில் நிற்பதால் எதையும் தைரியமாக முடிப்பீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். வேற்றுமதம், மொழியினர், வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. மச்சினருக்கு வேலைக் கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்துப் பேசுவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. ஆடை, ஆபரணம் சேரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். ராசிநாதன் குரு 6&ல் மறைந்திருப்பதால் எதிலும் பிடிப்பற்ற போக்கு, ஏமாற்றம், வீண் விரையம், மருத்துவச் செலவுகள் வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே! தலைமையின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவிற்கு நெருக்கமாவீர்கள். கன்னிப் பெண்களே! எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். சாதிப்பவர்களின் பட்டியலில் இடம் பிடிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 10, 11, 12 அதிஷ்ட எண்கள்: 2, 4 அதிஷ்ட நிறங்கள்: இளம் சிவப்பு, கிரே அதிஷ்ட திசை: வடக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *