இந்த வாரம் 7 படங்கள் ரிலீஸ்: வெற்றி பெற போவது எவை எவை?

இந்த வாரம் 7 படங்கள் ரிலீஸ்: வெற்றி பெற போவது எவை எவை?

கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் ஐந்து திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் வெள்ளியன்று ஏழு திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.

கவுதம் கார்த்திக் நடித்த இந்திரஜித், ராய்லட்சுமி நடித்த ‘ஜூலி, ராம்கி நடித்த ‘இங்கிலீஷ் படம், யாழ், வீரையன், லாலி, குரு உச்சத்துல இருக்காரு ஆகிய ஏழு தமிழ்ப்படங்கள் வெளியாகிறது. இவை போக தெலுங்கு, கன்னட, மலையாள, இந்தி மற்றும் ஆங்கில படங்கள் சிலவும் வெளியாகின்றன

இவற்றில் இந்திரஜித், ஜூலி ஆகிய இரண்டு படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் மற்ற படங்கள் அனைத்தும் ஒரு காட்சி அல்லது இரண்டு காட்சிகள் ஓடும் திரைப்படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply