shadow

இந்த மாதம் அம்மாவாகிறார் காஜல் அகர்வால்


கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய காஜல் அகர்வால், அஜித்துடன் நடித்த விவேகம் சூப்பர்ஹிட் ஆகியது. விரைவில் விஜய்யுடன் நடித்த ‘மெர்சல்’ திரைக்கு வருகிறது. மேலும் இன்று ‘ராணா’வுடன் அவர் நடித்த ‘நான் ஆணையிட்டால்’ படம் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் காஜல் அகர்வால் இந்த மாத இறுதியில் பெரியம்மா ஆகப்போகிறார். ஆம், அவருடைய தங்கையும் நடிகையுமான நிஷா அகர்வால் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு தொழிலதிபர் கரணை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பமான நிஷா அகர்வால் தற்போது முழுமாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், விரைவில் நிஷா அம்மாவாகவும், காஜல் அகர்வால் பெரியம்மாவாகவும் உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply