இந்த தற்கொலை எனக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது: நடிகை கஸ்தூரி

லக்ஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவின் ராமன் அவர்கள் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்று காலை அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சமூகத்தில் மிகச்சிறந்த நபராகவும் வெற்றியாளராகவும் திகழ்ந்த ராமன் அவர்கள், உடல்நிலை குறைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ராமன் மறைவு குறித்து பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் மற்றும் நடிகர் விவேக் உள்பட பல திரையுலக பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், தற்போது நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியதாவது:

லக்ஷ்மன் ஸ்ருதி ராமன் அவர்கள் தற்கொலையா? அளவு கடந்த அதிர்ச்சியும் துக்கமும் தொண்டையை அடைக்கிறது. ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்க வார்த்தையே இல்லை. சமூகத்தில் சிறந்தவர்கள், வெற்றியாளர்கள் கூட தற்கொலையை நாடுவது அச்சத்தை ஏற்படுத்துகிறது.

Leave a Reply