இந்தோனேஷியா சுனாமி: பலி எண்ணிக்கை 1350ஆக அதிகரிப்பு

இந்தோனேஷியா சுனாமி: பலி எண்ணிக்கை 1350ஆக அதிகரிப்பு

கடந்த வாரம் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பலத்த பூகம்பத்தை அடுத்து சிலமணி நேரங்களில் சுனாமியும் தாக்கியது.

சுனாமி தாக்கியதால் முதலில் ஒருசிலர் மட்டுமே பலியாகியிருப்பார்கள் என கருதப்பட்டது. ஆனால் இடுபாடுகளை அகற்றும் பணி நடைபெற்றபோது பலி எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 400க்கும் இருந்தது.

இந்த நிலையில் தற்போது குவியல் குவியலாய் மரணம் அடைந்தோர்களின் உடல்கள் கிடைத்து வருவதால் பலி எண்ணிக்கை 1350ஆக இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இன்னும் பல அடுக்கு மாடி குடியிருப்புகள், ஓட்டல்கள் என பல கட்டிடங்களின் இடிபாடுகள் அகற்றப்படாமல் இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

 

Leave a Reply