இந்தோனேஷியாவில் சுனாமி: 20 பேர் பரிதாப பலி

இந்தோனேஷியாவில் சுனாமி: 20 பேர் பரிதாப பலி

இந்தோனிஷியா நாட்டில் ஏற்பட்ட சுனாமி காரணமாக இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.

இந்தோனேஷியாவில் உள்ள சுன்டா என்ற பகுதியில், நீருக்கடியில் இருந்த கிராக்டோ என்ற எரிமலை திடீரென வெடித்து சிதறியது. இதனால் நீருக்குள் நில அதிர்வு ஏற்பட்டு, சுனாமி உருவாகியுள்ளது.

இன்று அதிகாலையில் ஏற்பட்ட இந்த சுனாமியால் இதுவரை 20 உயிரிழந்துள்ளதாகவு, சுமார் 160 பேர் காயமடைந்துள்ளதாகவும், சிலர் மாயமாகியுள்ளதாகவும் இந்தோனேஷியாவின் பேரிடர் மீட்புத்துறை தெரிவித்துள்ளது.

இந்த சுனாமியால் வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள் என அனைத்தும் சேதமடைந்துள்ளதாகவும், செராங், மற்றும்ன் பண்டேக்லங் பகுதிகளை இணைக்கும் நெடுஞ்சாலை ஒன்றும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

Leave a Reply