இந்து மதத்தை வளர்த்த பெருமை ராஜராஜ சோழனுக்கு உண்டு:ஹெச்.ராஜா

இந்து மதத்தை வளர்த்த பெருமை ராஜராஜ சோழனுக்கு உண்டு:ஹெச்.ராஜா

தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜ ராஜ சோழனின் 1033வது சதயவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கும்பகோணத்தில் நடந்த ராஜராஜ சோழனின் 1033வது சதயவிழாவில் பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த விழாவில் பேசிய ஹெச்.ரஜா, ‘தமிழ் மண்ணிலே மிகப்பெரிய அளவில் இந்து மதத்தையும் சைவத்தையும் வளர்த்த பெருமை ராஜராஜ சோழனுக்கு உண்டு. தஞ்சை மாவட்டத்தில் ஒரு கோயில் கூட பூட்டி உள்ளது என்ற நிலை இருக்க கூடாது என்பதை உருவாக்குவதே ராஜராஜனுக்கு செலுத்தும் புகழஞ்சலி என்று அவர் குறிப்பிட்டார்.

ஹெச்.ராஜாவின் இந்த பேச்சுக்கு சமூக வலைத்தள பயனாளிகள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply