இந்தி மொழி தினத்தில் தமிழின் பெருமையை பேசிய ப.சிதம்பரம்!

நேற்று நாடு முழுவதும் இந்தி மொழி தினம் இந்தி மொழி பேசப்படுபவர்களால் கொண்டாடப்பட்ட நிலையில் தமிழின் பெருமை குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியதாவது:

இன்று இந்தி தினம் என்று இந்தி மொழி பேசும் மக்கள் பெருமைப்படுகிறார்கள். அவரவர் மொழியை அவரவர் கொண்டாடுவதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறோம்

தமிழ் மொழி இந்தியாவின் தொன்மையான மொழி என்று தமிழ் பேசும் மக்கள் பெருமைப்படுவதும் நியாயமே

கீழடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெரும் தொல்லியல் அகழாய்வுகள் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளன என்பதும் நமக்குப் பெருமையளிக்கிறது

Leave a Reply

Your email address will not be published.