இந்தி, ஆங்கிலத்திற்கு செல்லும் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’

பார்த்திபன் நடித்து இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பார்த்திபன் ஒருவர் மட்டுமே படம் முழுவதும் நடித்திருந்த இந்தப் படம் ஆஸ்கார் விருது வரை சென்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழில் வெளியான இந்தப் படத்தை ஆங்கிலம் மற்றும் ஹிந்தியிலும் உருவாக்க முயற்சி செய்து வருவதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

என் தமிழ் அழகு.என்னை கூடுதல் அழகாக்குவதும் தமிழ். தட்டுத்தடுமாறி ஆங்கிலமும்,தப்பித்தவறி மற்ற மொழிகளும் பேச முயன்றதுண்டு.ஹிந்தி முஜே நஹி மாலும் ஹே! But ‘ஒத்த செருப்பு’ ஹிந்தியும் விரைவில் ஆங்கிலமும் பேச இருப்பதால்,இரு மொழிகளிலும் அறிவும் ஆற்றலும் நிறைந்த ஒரு இரு மொழிகளிலும் அறிவும் ஆற்றலும் நிறைந்த ஒரு Personal Assistant (பால் பாகுபாடில்லை) தேவைப்படுகிறார்.ஈடுபாட்டுடன் பணிப்புரிய விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள….
thebioscopefilmframers@gmail.com