பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நேற்று முன் தினம், வண்டலூரில் பொதுக்கூட்டத்தில் பேசியதை தொடர்ந்து நேற்று காலை எஸ்.ஆர்.எம். கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார்.
கடந்த பல வருடங்களாக இந்திய நாடு, கல்வியில் பின் தங்கியிருப்பதாகவும், உயர்கல்வி பயின்ற மாணவர்கள் இந்தியாவிலேயே தொழில் துவங்கவும், வேலைவாய்ப்புகளை பெறவும் முயற்சி செய்ய வேண்டும் என்று பேசினார். உள்நாட்டு தொழில்நுட்பம் வளர்வதற்கு இந்திய மாணவர்கள் வெளிநாட்டுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்கப்படவேண்டும் என கூறிய மோடி, கல்வித்துறையின் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு திருப்திகரமாக உள்ளது என்றும், கல்வித்துறைக்காக அரசு பல புதிய முயற்சிகளை கொண்டுவர வேண்டியது அவசியம் என்று கூறினார்.
எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கிய விழாவில் கலந்து கொண்ட பின்னர் மோடி, கேரள மாநிலம் கொச்சிக்கு சென்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.