இந்திய கடலோரங்களில் சென்னையில்தான் அதிக பிளாஸ்டிக் கழிகள்: மத்திய அமைச்சர்

இந்திய கடலோரங்களில் சென்னையில்தான் அதிக பிளாஸ்டிக் கழிகள்: மத்திய அமைச்சர்

இந்தியாவில் உள்ள கடற்கரை ஓரங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் சென்னையில் தான் உள்ளது என்றும் குறிப்பாக சென்னை எலியாட் கடற்கரையில் சுற்றுலா பயணிகளால் வீசியெறியப்படும் கழிவுகளில் 40% பிளாஸ்டிக் கழிவுகள் என்றும் மத்திய சுற்றுலாத்துறை இணையமைச்சர் மகேஷ் ஷர்மா மாநிலங்களவையில் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு அடுத்தபடியாக ஒடிஷாவில் உள்ள கோபால்பூர் கடற்கரையில் 96% பிளாஸ்டிக் கழிவுகள் வீசியெறியப்படுகின்றன என்றும் மத்திய சுற்றுலாத்துறை இணையமைச்சர் மகேஷ் ஷர்மா கூறியுள்ளார்.

நாளை முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கூ தடை விதிக்கப்பட்ட நிலையில் சென்னைக்கு ஏற்பட்டுள்ள இந்த அவலநிலை விரைவில் மாறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply

Your email address will not be published.