இந்திய அணிக்காக ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்த கலக்கல் பாடல்

இந்திய அணிக்காக ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்த கலக்கல் பாடல்

இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற வேண்டி வாழ்த்திய பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்த பாடல் ஒன்றை அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த பாடல் இதுதான்:

மாஸுக்கே மாஸுடா, ஆப்பனொண்ட் தூசுடா
கெத்தை நீயும் காட்டிடு இந்தியா
வலிகளை மறந்திடு எழுந்திடு ஓ ஓ ஓ
தடைகளை தகர்த்திடு உயர்ந்திடு ஓ ஓ ஓ
சிக்ஸரு பறக்கட்டும் விசிலுதான் கிழியட்டும்
கெத்த நாம காட்டுவோம், கிரிக்கெட்டோட கிரெளனுடா

பிபி தான் எகிறட்டும், பல்ஸ் ரேட்டு கூடட்டும்
டானுக்கெல்லாம் டானுடா இந்தியா
வாடா வாடா ஆட்டம் நம்ம கையில
தொட்டா தூக்கிடும் வித்தை நம்ம பையில
வம்பா வந்துட்டா தெறிக்க விடு சிக்ஸூல
தெம்பா இறங்குடா கிரெளடு நம்ம கையில

சிக்ஸரு பறக்கட்டும் விசிலுதான் கிழியட்டும்
கெத்த நாம காட்டுவோம், கிரிக்கெட்டோட கிரெளனுடா
பிபி தான் எகிறட்டும், பல்ஸ் ரேட்டு கூடட்டும்
டானுக்கெல்லாம் டானுடா இந்தியா

Leave a Reply

Your email address will not be published.