இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் இடையேயான முதல் டி20 போட்டி


இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் இடையேயான முதல் 20 ஓவர் போட்டி நாளை நடைபெறவுள்ளதை அடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டியை காண தயாராகி வருகின்றனர்.

உலக கோப்பை தொடர் முடிந்து மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மேற்கிந்திய தீவுகள் அணியுடன் தலா 3 டி20, ஒரு நாள் போட்டி, டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

அதன்படி முதல் டி20 போட்டி நாளை பிளோரிடா மைதானத்தில் இந்திய நேரப்படி, இரவு 8 மணிக்கு துவங்குகிறது. கேப்டன் விராத் கோலி தலைமையில் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், டி20ல் நடப்பு சாம்பியனான மேற்கு இந்திய தீவுகள் அணியுடன் இந்திய அணி மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply