இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் மார்ச் 12-ம் தேதி முதல் டி20 தொடர் ஆரம்பமாக உள்ளது

முதல் போட்டி அகமதாபாத்தில் தொடங்க உள்ள நிலையில் இந்த போட்டியில் தமிழக வீரர் நடராஜனுக்கு இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது

இதுவரை நடராஜன் அணியில் இடம்பெறுவது உறுதி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது அதேபோல் வருண் சக்கரவர்த்தி இன்னும் உடல் தகுதி பெறவில்லை என்றும் ராகுல் திவாரியும் உடல் தகுதி இல்லாததால் இருவரும் இந்த போட்டியில் இணைய வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது

ராகுல் சஹார் டி20 தொடரில் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது டி20 தொடரில் நடராஜன் இடம் பெறுவாரா என்பது குறித்த தகவல் நாளை தெரியவரும்

Leave a Reply