இந்தியா – இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் இலங்கையில் நடந்து வருகிறது.

இதில் ஒருநாள் போட்டியில் 2 – 1 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்றது.

இந்நிலையில் நேற்று முதல் டி20 போட்டி நடந்தது, இதில் இந்தியா 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்து, 165 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 126 ரங்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.