இந்தியா அபார பேட்டிங்: 348 இலக்கை எட்டுமா நியூசிலாந்து?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் அபாரமாக விளையாடி 347 ரன்கள் குவித்துள்ளார்கள்

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானத்தை அடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 347 ரன்கள் எடுத்துள்ளது

ஸ்ரேயாஸ் அய்யர் 103 ரன்களும் கேஎல் ராகுல் 88 ரன்களும் விராட் கோலி 51 ரன்கள் எடுத்து உள்ளனர். இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் 348 என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply