இந்தியாவைத் தொடர்ந்து இலங்கையிலும் மிருக வதைக்கு தடை : நீதிமன்றம் அதிரடி

இந்தியாவைத் தொடர்ந்து இலங்கையிலும் மிருக வதைக்கு தடை : நீதிமன்றம் அதிரடி

இனி கோயில்களில் மிருகங்களை பலியிடக்கூடாது என யாழ்பாணம் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இலங்கை சைவ மகா சபையினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம் இன்று தீர்ப்பு வெளியிட்டது. இந்த உத்தரவை நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் பிறப்பித்தார்.

இதில், “இனி இந்து கோயில்களில் மிருகவதை செய்யக்கூடாது. இத்தடை உத்தரவினை மீறி யாரேனும் மிருகங்களை பலியிட்டால், அதைப் பார்த்து யாரேனும், போலீஸில் புகார் அளிக்கும் பொருட்டு, அந்த தவறை செய்த நபர் மீது வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படும்.” என தெரிவித்தார்.

இந்த மனுவில், “இந்து ஆலயங்களில் மிருக பலியிடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால், இதற்கு தடைவிதிக்க வேண்டும்” என புகார் அளிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published.