இந்தியாவுக்கு வெளியே அப்துல்கலாமின் முதல் சிலை. இலங்கை வடமாகாண முதல்வர் திறந்து வைத்தார்.

இந்தியாவுக்கு வெளியே அப்துல்கலாமின் முதல் சிலை. இலங்கை வடமாகாண முதல்வர் திறந்து வைத்தார்.

abdul kalamமுன்னாள் இந்திய ஜனாதிபதி கடந்த ஜூலை மாதம் மரணம் அடைந்தார். அவர் ஜனாதிபதியாக இருந்தபோது இந்திய-இலங்கை நட்புறவை வளர்க்கும் விதமாக செயல்பட்டதன் எதிரொலியாக இந்திய தூதரகம் சார்பில் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் அப்துல் கலான் அவர்களின் மார்பளவு சிலை நிறுவப்பட்டது. இதனை இந்திய தூதர் ஒய்.கே.சின்கா, வட மாகாண முதல்-மந்திரி விக்னேஸ்வரன் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். இந்தியாவுக்கு வெளியே அப்துல் கலாமுக்கு முதன் முறையாக சிலை நிறுவப்பட்டது இலங்கையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்துல் கலாம் கடந்த 2012-ம் ஆண்டு இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்துக்கு முதன் முறையாக சென்றார். அப்போது அவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ‘புயலை தாண்டினால் தென்றல்’ என்ற தலைப்பில் பேசினார். தன்னுடைய உரையாடலில் 1941-ம் ஆண்டு ராமேசுவரத்தில் 5-ம் வகுப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகசுந்தரநாத் என்ற ஆசிரியரிடம் கணிதம் பயின்றதாக அவர் நினைவு கூர்ந்தார். பின்னர் மீண்டும் கடந்த 2015-ம் ஆண்டு கொழும்புக்கு அப்துல் கலாம் சென்றார். அதுவே அவரது கடைசி வெளிநாட்டு பயணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இலங்கையில் ஜனநாயகம் மலர வேண்டும், அமைதி திரும்ப வேண்டும், அனைத்து மக்களும் ஒற்றுமையாக, சமாதானமாக, சரிசமமாக வாழ வேண்டும், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும் என்பதற்காக அவர் தீவிர முயற்சிகள் மேற்கொண்டார். அப்துல்கலாம் மறைந்த போது யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் வைக்கப்பட்டிருந்த பதிவேட்டில் ஆயிரக்கணக்கானோர் அனுதாபம் தெரிவித்து இருந்தனர். இப்போதும் இலங்கை வட மாகாணங்களில் அப்துல் கலாம் பெயரில் இளைஞர் சங்கங்கள் இயங்கி பல சமூக சேவைகள் செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது..

Leave a Reply