இந்தியாவுக்கு தப்ப முயன்ற மாலத்தீவு மாஜி துணை அதிபர் கைது

இந்தியாவுக்கு கப்பலில் தப்பி வர முயற்சித்த மாலத்தீவு மாஜி துணை அதிபர் அகமத் அதிப் கைது செய்யப்பட்டார். இதனால் மாலத்தீவில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது

வெடிகுண்டு வழக்கில் வீட்டுக்காவலில் அகமது அதிப் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் வீட்டுக்காவலில் இருந்து திடீரென தப்பி இந்திய சரக்குக் கப்பலில் பதுங்கினார்

இதனையடுத்து அவரை அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடிய நிலையில் நடுக்கடலில் இந்திய அதிகாரிகள் சோதனை நடத்திய போது அகமது அதிப் சிக்கினார்

அகமது அதிப்பிடம் இந்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

Leave a Reply