இந்தியாவில் ஜனநாயகம் என்பதே கிடையாது – ராகுல்காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் ஜனநாயகம் என்பதே கிடையாது என ராகுல்காந்தி கூறினார்.

புதுடெல்லி, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சர்வாதிகாரத்தை எதிர்ப்பவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

இந்தியாவில் ஜனநாயகம் என்பதே கிடையாது.

ஜனநாயகத்தின் மரணத்தை நாம் கண்டுகொண்டிருக்கிறோம்.

ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தொடங்கி செங்கல் செங்கலாக கட்டப்பட்ட இந்தியா, உங்கள் கண் முன்னே அழிந்து கொண்டிருக்கிறது.

மக்களின் பிரச்சினைகளான விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், சமூகத்தில் வன்முறை போன்றவை எழுப்பப்படக் கூடாது என்பதே அவர்களது (பாஜக) திட்டம்.

இந்தியாவில் இருக்கும் 2, 3 பணக்காரர்களுக்கு மட்டும் தான் இந்த சர்வாதிகார ஆட்சி நடத்தப்படுறது.

ஆர்.எஸ்.எஸ்.சின் கருத்தை எதிர்ப்பதே எனது வேலை, அதை தொடர்ந்து செய்யப் போகிறேன்.

நான் எவ்வளவு அதிகமாக எதிர்க்கிறேனோ , அவ்வளவு அதிகமாக நான் தாக்கப்படுவேன், நான் கடுமையாகத் தாக்கப்படுவேன்