இந்தியாவின் வெற்றிக்கு ஐபிஎல் தான் காரணம்: அப்ரிடி

இந்தியாவின் வெற்றிக்கு ஐபிஎல் தான் காரணம்: அப்ரிடி

நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணம் ரோஹித் சர்மாவின் அபார சதம், கோலி, ராகுலின் அற்புதமான அரை சந்தங்கள் மற்றும் குல்தீப், பாண்டியாவின் துல்லியமான பந்துவீச்சு என்பதே ஆகும். இந்த வகையில் உலகக் கோப்பைப் போட்டியில் 7-வது முறையாக பாகிஸ்தானை வென்ற சாதனை வரலாற்றை இந்திய அணி தக்கவைத்துக்கொண்டது.

இந்நிலையில் இந்திய அணியின் வெற்றி குறித்து ஷாகித் அப்ரிடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: ஒரு தகுதியான வெற்றியை பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். கிரிக்கெட் விளையாடும் திறன் உயர்த்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஐபிஎல் போட்டிகளே. ஐபிஎல் போட்டி இளம் வீரர்களை கண்டறியவதற்கு மட்டும் உதவவில்லை, நெருக்கடியான நேரத்தில் இளம் வீரர்கள் அழுத்தத்ததை கையாளும் விதத்தையும் கற்று கொடுத்திருக்கிறது” என்று பதிவு செய்துள்ளார்.

Leave a Reply