இந்தியாவின் நட்பு கிடைத்தது ஆஃப்கானிஸ்தானின் அதிர்ஷ்டம் – பிரெஸ்னா முசஸாய்

இந்தியாவின் நட்பு கிடைத்தது ஆஃப்கானிஸ்தானின் அதிர்ஷ்டம் – பிரெஸ்னா முசஸாய்

இந்தியாவின் நட்பு கிடைத்தது ஆஃப்கானிஸ்தானின் அதிர்ஷ்டம் என அந்நாட்டின் மலாலாவாகக் கருதப்படும் பிரெஸ்னா முசஸாய் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு, போலியாவால் ஒரு கால் செயலிழந்த மாணவி முசஸாயின் மற்றொரு கால், தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டால் செயல் இழந்தது. வேறு வழியின்றி படிப்பைக் கைவிட்ட அவர், படுத்த படுக்கையானார். குடும்பத்தினரின் உத்வேகத்தால் தற்போது அவர் கல்லூரிப் படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

பாகிஸ்தானின் மலாலா யூசுஃப்சாயைப் போல் பிரெஸ்னா முசஸாய் பார்க்கப்படுகிறார். அவர் செய்திநிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ஆஃப்கானிஸ்தானியர்களுக்கு இந்தியா என்றால் மிகவும் விருப்பம் என்றும், கல்வி உதவித் தொகை, முதலீடுகள் உள்ளிட்டவற்றின் மூலம் தங்களுக்கு இந்தியா உதவி வருவதாகவும் ப்ரெஸ்னா கூறியுள்ளார்.

Leave a Reply