இந்தியாவின் தாக்குதலில் பயங்கரவாத தலைவர் மசூத் அசாரின் உறவினர் கொல்லப்பட்டார்; விஜய் கோகலே

இந்தியாவின் தாக்குதலில் பயங்கரவாத தலைவர் மசூத் அசாரின் உறவினர் கொல்லப்பட்டார்; விஜய் கோகலே

இன்று அதிகாலை பாகிஸ்தானுக்குல் புகுந்து இந்திய விமானப்படை அதிரடியாக தீவிரவாத முகாம்கள் மீது தாகுதல் நடத்தியது. இந்த தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது

தீவிரவாதிகளின் முகாம்கள் குறித்து பாகிஸ்தானிடம் பலமுறை தகவல் தந்தும் பயங்கரவாத முகாம்களை அழிக்க பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் பற்றி தகவல் தந்தும் அந்நாடு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் நமது படை தாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது

இன்றைய விமானப்படையின் தாக்குதலில் பயங்கரவாத தலைவர் மசூத் அசாரின் உறவினர் கொல்லப்பட்டார்; ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

இவ்வாறு இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே விளக்கம்

Leave a Reply