இந்தியாவின் டாப்-25 வசூல் படங்கள் பட்டியலில் ‘மெர்சல்

இந்தியாவின் டாப்-25 வசூல் படங்கள் பட்டியலில் ‘மெர்சல்

இந்தியாவில் இதுவரை வெளியான திரைப்படங்களில் அதிக வசூலை பெற்ற திரைப்படங்கள் எவை எவை? என்பது குறித்த பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது

இந்த பட்டியலில் அமீர்கானின் ;டங்கல்’ திரைப்படம் ரூ.2000 கோடிக்கும் மேல் வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக சுமார் ரூ.1700 கோடி வசூல் செய்த ‘பாகுபலி 2’ படம் உள்ளது மேலும் பிகே, பாகுபலி, பாஜ்ராங்கி பைஜான் ஆகிய படங்கள் மூன்று முதல் ஐந்தாவது இடங்களை பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் 25வது இடத்தை தளபதி விஜய்யின் ‘மெர்சல் படம் பிடித்துள்ளது. இதன் மூலம் இந்திய திரையுலகில் வசூல் சாதனை செய்த படங்களின் பட்டியலில் மெர்சல் இடம்பெற்றுள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ‘மெர்சல்’ படத்தால் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு பலகோடி நஷ்டம் என்று ஒரு பிரபல தயாரிப்பாளர் பேட்டி அளித்திருந்தார். மெர்சல் படத்தின் வசூல் குறித்து வதந்தி பரப்பிய அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த பட்டியல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply