’இந்தியன் 2’ படப்பிடிப்பில் சட்டவிரோதமான செயலா? பரபரப்பு தகவல்

’இந்தியன் 2’ படப்பிடிப்பில் சட்டவிரோதமான செயலா? பரபரப்பு தகவல்

இந்தியன் படப்பிடிப்பில் 3 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதிக உயரம் கொண்ட கிரேன்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியது தான் இந்த விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது
வழக்கமான சினிமாவில் 40 அடி முதல் 50 அடி உயரம் வரை உள்ள கிரேன்களை மட்டுமே பயன்படுத்துவது வழக்கம். ஆனால் இந்தியன் 2’ படப்பிடிப்பிற்காக பயன்படுத்தப்பட்ட இதன் உயரம் 200 அடி என்று கூறப்படுகிறது இந்த கிரேன்கள் பொது மக்கள் இருக்கும் இடங்களில் பயன்படுத்தக் கூடாது என்பது விதி. 40 அடி உயரம் வரை கிரேனை பயன்படுத்தும்போது காவல்துறையிடம் அனுமதி வாங்கி இந்த கிரேன்களை இயக்கலாம். ஆனால் 40 அடிக்கு மேல் உள்ள கிரேன்களை இயக்கும்போது பொதுமக்கள் இருக்கும் பகுதியில் இயக்கக் கூடாது என்பது விதிமுறை இருக்கும் நிலையில் படக்குழுவினர் பலர் இருக்கும் இடத்தில் 200 அடி உயரம் கொண்ட கிரேன்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக தெரிகிறது

மேலும் கிரேனில் அதிக எடை கொண்ட விளக்குகளை வைத்ததும் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததும்தான் விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published.