இந்தியன் 2 படப்பிடிப்பில் மூவர் பலி: பொறுப்பேற்பது யார்?

இந்தியன் 2 படப்பிடிப்பில் மூவர் பலி: பொறுப்பேற்பது யார்?

கமலஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது பூந்தமல்லியை அடுத்த ஒரு பிலிம் சிட்டியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது

ஏராளமான துணை நடிகர்களுடன் அதிரடி சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில் திடீரென ஒரு கிரேன் அறுந்து விழுந்ததால் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது

இந்த விபத்தில் இயக்குனர் ஷங்கரின் உதவியாளர்கள் மூன்று பேர் உயிரிழந்ததாகவும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த விபத்து குறித்து கமலஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட
அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களை பார்த்து மருத்துவர்களிடம் பேசியுள்ளேன். முதலுதவி வழங்கப்பட்டு உரிய சிகிச்சைக்கான வேலைகள் நடக்கிறது. இவர்கள் விரைவாக உடல் நலம் பெற்றிடுவார்கள் என்ற நம்பிக்கையுடனே இந்த இரவு விடியட்டும்’

விபத்தில் சிக்கி விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் விரைவில் அவர்கள் குணமாவது பயம் அவர்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் டுவிட்டரில் இரங்கல் தெரிவிப்பதோடு நின்றுவிடாமல் உயிரிழந்தவர்களுக்கு தகுந்த நிவாரணமும், இனிமேலும் இவ்வித தவறு நடக்காமல் பார்த்து கொள்வதும் படக்குழுவினர்களின் கடமை என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.