இந்தியன் 2′ படத்தில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் விலகியது ஏன்?

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். மேலும் ஒருசில நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார்

இந்த நிலையில் கால்ஷீட் தேதி பிரச்சனை காரணமாக ஐஸ்வர்யா ராஜேஷ் ‘இந்தியன் 2’ படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது. அவர் நடிக்கவிருந்த கேரக்டரில் நடிக்க ஒரு முன்னணி நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

கமல்ஹாசன், காஜல் அகர்வால், ப்ரியா பவானிசங்கர், ரகுல் ப்ரித்திசிங்சித்தார்த், சமுத்திரக்கனி, வித்யூத் ஜாம்வால், விவேக், நெடுமுடி, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

Leave a Reply