இந்தியன் ரயில்வே துறைக்கு ரூ.5000 கோடி மிச்சம்! எப்படி தெரியுமா?

இந்தியன் ரயில்வே துறைக்கு ரூ.5000 கோடி மிச்சம்! எப்படி தெரியுமா?

இந்தியன் ரயில்வே நஷ்டத்தில் செயல்படுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளிவந்த நிலையில் இந்த செய்தியை ரயில்வே துறை மறுத்துள்ளது. அதுமட்டுமின்றி ரூ.5000 கோடி லாபத்தில் இந்தியன் ரயில்வே செயல்பட்டு வருவதாக விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலாளர் அமைப்பாக விளங்கும் இந்தியன்ஹ் ரயில்வே உலகின் பிரம்மாண்ட போக்குவரத்துத் துறைகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் சிக்கன நடவடிக்கை காரணமாக சுமார் ரூ.,5000 கோடிக்கும் மேல் ரயில்வே துறை மிச்சப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளது.

குறிப்பாக இந்தியன் ரயில்வே கடந்த ஏப்ரல் 2015 முதல் அக்டோபர் 2017 வரையிலான காலக் கட்டத்தில் மின்சாரத்தை சேமித்ததன் மூலம் ரூ.5,636 கோடியை மிச்சப்படுத்தியுள்ளது. நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள், இந்த வருவாய் ரூ.6927 கோடியாக உயரும் என்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ரூ.41,000 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சாரச் சட்டம் 2003ன் படி, ஒரு மெகாவாட் லோடுக்கு அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தும் ஒரு அமைப்பு, நேரடியாகச் சந்தையில் இருந்து மின்சாரம் பெறலாம். இதனை அடிப்படையாகக் கொண்டு ஓபன் ஆக்சிஸ் அமைப்புகள் செயல்படுகின்றன.

தற்போது மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் கர்நாடகா ஆகிய 7 மாநிலங்களுக்கு தாமோதர் வேலி கார்பரேஷன் ஏரியா நிறுவனத்திடம் இருந்து இந்திய ரயில்வே துறை நேரடியாக மின்சாரம் பெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published.