இத்தாலியில் ஆட்சி மாற்றம்: எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சி

இத்தாலியில் ஆட்சி மாற்றம்: எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சி

இத்தாலி நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி தோல்வி அடைந்ததை அடுத்து இரண்டு எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சி அமைகக்வுள்ளன

சமீபத்தில் நடந்து முடிந்த இத்தாலி பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அந்நாட்டில் கடந்த 11 நாட்களாக அரசியல் குழப்ப நிலை இருந்தது. இந்த நிலையில் பிரதான எதிர்க்கட்சிகளான பைவ் ஸ்டார் கூட்டணி மற்றும் மத்திய வலதுசாரி கூட்டணி கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க முடிவு செய்துள்ளன.

இந்த கூட்டணியை ஆட்சியில் அமர்த்த அந்நாட்டில் உள்ள சட்ட பேராசிரியர் கியூசெப்பீ கோண்டே என்பவரின் பணி மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நிலையில் இவருடைய தீவிர முயற்சியால் இந்த புதிய கூட்டணியின் ஆதரவால் இவரே பிரதமர் பதவியையும் ஏற்கவுள்ளார்.

எவ்வித அரசியல் அனுபவமும் இல்லாத கியூசெப்பீ கோண்டே பிரதமர் பதவியை ஏற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply