இதை கண்டிக்காத எவரும் நாட்டின் குடிமக்களாக இருக்கத் தகுதியற்றவர்கள்: ஹெச்.ராஜா

இதை கண்டிக்காத எவரும் நாட்டின் குடிமக்களாக இருக்கத் தகுதியற்றவர்கள்: ஹெச்.ராஜா

டெல்லியில் நடைபெற்று வரும் கலவரத்தை அடக்க டெல்லி மாநில போலீசாரும் மத்திய அரசும் மிகத் தீவிரமான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நிலையில் ஒரு சில அரசியல்வாதிகள் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

இந்த நிலையில் டெல்லி கலவரக்காரர்களால் பலியான ரத்தன்லால் என்ற தலைமை காவலர் குடும்ப புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவர்கள் ஒரு சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

ஹெச். ராஜா பதிவு செய்த டுவிட்டரில் கூறியிருப்பதாவது: முஸ்லீம் வன்முறையாளர்களால் இன்று தலைமைக் காவலர் ரத்தன் லாலின் குடும்பம் அனாதையாக்கப் பட்டுள்ளது. இதை கண்டிக்காத எவரும் இந்நாட்டின் குடிமக்களாக இருக்கத் தகுதியற்றவர்கள்.

Leave a Reply