இதைவிட நல்ல முகங்கள் எங்களிடம் உள்ளது: முதல்வரை கிண்டல் செய்த பாஜக

இதைவிட நல்ல முகங்கள் எங்களிடம் உள்ளது: முதல்வரை கிண்டல் செய்த பாஜக

டெல்லி சட்டமன்றத்திற்கு வரும் பிப்ரவரி எட்டாம் தேதி தேர்தல் நடைபெறும் என சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்த நாளிலிருந்து அங்கு தேர்தல் பணிகள் சூடு பிடிக்க தொடங்கி விட்டன

குறிப்பாக பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் தனது டுவிட்டரில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை தைரியமாக சொல்ல முடியுமா என்று கேள்வி எழுப்பினார்

இந்த கேள்விக்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக, முதல்வர் கெஜ்ரிவாலின் புகைப்படத்தை பதிவு செய்து ’இந்த முகத்தை விட எங்களிடம் நல்ல திறமையான முகங்கள் அதிகம் இருக்கின்றன’ என்று கிண்டலடித்து பதிவு செய்துள்ளது. பாஜகவின் இந்த டுவிட் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply